தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் வரவேற்பை பெற்றுள்ள தந்தூரி டீ - மாற்றுத்திறனாளியின் சாதனை

தருமபுரி: மாற்றுத்திறனாளி நடத்தும் டீ கடையில் தந்தூரி டீ குடிக்க வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.

தந்தூரி டீ

By

Published : Nov 7, 2019, 8:50 PM IST

கரி அடுப்பு தனலில் போடப்பட்ட சின்னச் சின்ன மண்பானைக் குடுவைகள் கிடக்கின்றன. வாடிக்கையாளர்கள் கேட்டதும், சட்டென இடுக்கியில் மண் குடுவையை எடுத்து, ஏற்கனவே போடப்பட்ட `தம் டீ'யை அதில் ஊற்ற பொங்கி வரும் டீயை, கரம் மசாலா நறுமணத்துடன் அப்படியே கோப்பையில் கொடுக்க வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் அருந்துகிறார்கள்.

பலருக்கு பல நேரங்களில் தேநீர்தான் எல்லாம். அதைக் குடிக்காமல் தலை பிய்த்துக்கொள்ளும் சாமானியர்கள் இப்போதும் இருக்கவே செய்கிறார்கள். அந்த வகையில் வித்தியாசமாக கொடுக்கப்படும் தந்தூரி டீயைப் பருக வாடிக்கையாளர்கள், தருமபுரி பகுதியில் டீக்கடை நடத்தும் இவரது கடைக்கு படையெடுக்கிறார்கள்.

டீ போடும் முறை

டீ அருந்துவது சிலரது வாழ்வில் அத்தியாவசியமான பணிகளில் ஒன்றாகவும், அத்தியாவசிய பானமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் டீ பலவகையாக தயாரிக்கப்படுகிறது. பாலுடன் தேயிலை தூள் இணைத்து கொதிக்க வைத்து தயாரித்தல், சுடுநீரோடு தேயிலை தூள் கொதிக்க வைத்து வரும் டீ., மசாலா டீ, லெமன் டீ என பல வகைகளில் டீ தயாரிக்கப்பட்டு அந்தந்த பகுதிக்கு ஏற்ற வகையில் விற்பனையாகிறது.

தனலில் சூடேறும் மண்குடுவைகள்

இதேபோல் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அபுல் கலாம் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் தருமபுரியில் தந்தூரி டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையில் சிறப்பு மண் குவளையை மரக்கரிகளின் தனலில் வைத்து சூடேற்றி அதில் தயாரிக்கப்பட்ட தம் டீ யை ஊற்றும் பொழுது பொங்கிவரும் டீ தான் தந்தூரி டீயாகும்.

மண் குடுவைகள்

தற்போது இந்த வகையான டீ தருமபுரியில் அதிக அளவில் விற்பனையாகிறது. ஆனாலும் அபுல் கலாம் நடத்திவரும் இந்தக் கடைக்கு மட்டும் தனியொரு வாடிக்கையாளர்கள் கூட்டம் வருகிறது. அப்படி என்னதான் இருக்கு இவர் விற்பனை செய்யும் டீயில்,

மாற்றுத்திறனாளி நடத்தும் தந்தூரி டீ

டீ தயாரிக்கும் முறை: இவர் பாலை, டீ தூளுடன் சேர்த்து கொதிக்க வைத்து, அதனோடு இஞ்சி, பட்டை, இலவங்கம், ஏலக்காய், கீழாநெல்லி ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து சிறிதளவு ஏலக்காய், இலவங்கத்தை மண் குடுவையில் வைத்து தனலில் சூடேற்றி அது காய்ந்தவுடன் டீயை சேர்த்து கொடுக்கிறார். இதனால் மற்ற கடைகளை விட, சுவை சற்று அதிகமாக கிடைப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் டீ பிரியர்கள் இவரது கடையை மொய்க்கிறார்கள்.

இதையும் படிங்க:கடை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை: மூக்கை பதம்பார்த்த ரசிகர்கள்..!

ABOUT THE AUTHOR

...view details