தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம் (50). இவர் கர்நாடக மாநிலத்தில் சர்ஜாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காடுகோடி, சூர்யாசிட்டி, எலக்ட்ரானிக்சிட்டி பகுதிகளில் இருசக்கர வாகனங்களைத் திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்த வாகனங்களைத் தருமபுரி பாலக்கோடு பகுதிக்குக் கொண்டுச் சென்று அடமானம் வைத்து பணம் சம்பாதித்து வந்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த சர்ஜாபுரம் காவல்துறையினர், வாகனத்தைத் திருடிய அருணாச்சலத்தை சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு தேடி வந்துள்ளனர்.