தர்மபுரி நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி பாலு (43). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில மகளிரணி செயலாளராக பணியாற்றி வந்தார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தர்மபுரி நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி பாலு (43). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில மகளிரணி செயலாளராக பணியாற்றி வந்தார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜெயலட்சுமி பாலுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று (ஜூன் 2) உயிரிழந்தார். ஜெயலட்சுமி பாலுவின் மறைவிற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான வேல்முருகன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.