தருமபுரி: பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவ தலைவரும், பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணியின் தம்பி ஜி.கே.முத்துவின் மகள் சுதாகுமாரி – இன்பரசன் திருமணவிழா தருமபுரி ஆட்டுக்காரன் பட்டி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சேலத்தில் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று (பிப்.15) இரவு 9 மணி அளவில் சேலத்திலிருந்து புறப்பட்டு தருமபுரி வந்து மணமக்களை வாழ்த்தினார்.