தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களிடம் அவதூறாக அருவருக்கத்தக்க வகையில் பேசும் மேற்பார்வையாளர் வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூய்மைப் பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மேற்பார்வையாளரைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் - protest in dharmapuri
தருமபுரி: பென்னாகரம் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளரைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை அடுத்து பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதால் போராட்டத்தை விலக்கிக்கொள்ளப்பட்டது.