தர்மபுரி: பென்னாகரம் ஒன்றியம், பன்னப்பட்டி, போடூர் இருளர் காலனி உள்ளிட்ட இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்புப் பணி நேற்று (ஆக.12) நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கணக்கெடுப்பு பணிகளின்போது, தர்மபுரி மாவட்டக் கல்வி அலுவலர் குழுவினர் பள்ளி செல்லா குழந்தைகளிடம் பள்ளிக்கு செல்வதன் அவசியத்தை எடுத்துக் கூறினர்.
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி அப்போது நடைபெற்ற கணக்கெடுப்பு, விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் அம்மாவட்டக் கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், முனிரத்தினம் ஆகியோர் தலைமையிலான குழுவினா், இருளா் காலனி பகுதியைச் சோ்ந்த 9 வயது மாணவி, பள்ளி படிப்பு படிக்காமல் இருந்ததைக் கண்டறிந்து மாணவியை நேரடியாக நான்காம் வகுப்பில் சேர்த்தனர்.
மேலும், இப்பகுதி மக்களிடம் கல்வி கற்பதின் அவசியம் பற்றியும், அரசின் சலுகைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறும் அறிவுரை கூறினார்.
இதையும் படிங்க:'சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு'