தர்மபுரி:பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்றபோது அவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறியதாகவும், அதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது.
திடீர் நெஞ்சுவலி : அமைச்சர் அன்பில் மருத்துவமனையில் அனுமதி! - Anbil Mahesh Poiyamozhi admitted to hospital
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காரிமங்கலம் தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்தவுடன், அமைச்சர்கள் சக்கரபாணி, சிவசங்கரன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் திமுகவினர் மருத்துவமனைக்கு சென்றனர். தொடர்ந்து உடல்நிலை சீரனதும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிருஷ்ணகிரி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, பரிசோதனைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு சென்றார். மேலும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், காரிமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.