தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுப்பிரமணிய சிவாவின் 136ஆவது பிறந்த நாள் - சிலைக்கு மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சித் தலைவர்! - சுப்பிரமணிய சிவா 136ஆவது பிறந்த நாள்

தருமபுரி : விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் 136ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவிற்கு மறியாதை செய்த மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி

By

Published : Oct 4, 2019, 4:47 PM IST

சுதந்திரப் போராட்டவீரர் தியாகி சுப்பிரமணிய சிவாவின் 136ஆவது பிறந்த நாளையொட்டி தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திலும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளயில் அமைந்துள்ள அவரது சிலைக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் 04.10.1884ஆம் ஆண்டு பிறந்த தியாகி சுப்பிரமணிய சிவா, விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்குப்பெற்று 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்ததோடு ஆங்கிலேயருக்கு எதிரான பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டவர்.

விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவிற்கு மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி

மேலும், பாரத மாதவிற்கு கோயில் கட்டவேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்தும் நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில், அவரது கனவை நனவாக்கும் வகையில் பாரதமாதா ஆலயத்தை பாப்பாரப்பட்டியில் தமிழ்நாடு அரசு அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கண்ணீர் வராமல் அழுவது எப்படி - டெமோ காட்டிய சமாஜ்வாதி தலைவர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details