தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சியில் சுமார் 150க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், 20க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தினந்தோறும் கரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அலுவலகத்தில் நுழையும்போதும், அலுவலத்தை விட்டுச் செல்லும்போதும் கிருமி நாசினி கொண்டு தங்களது கைகளைச் சுத்தம் செய்து வந்தனர்.
தானியங்கி கிருமி நாசினி இயந்திரத்தை அறிமுகம் செய்த சார் ஆட்சியர் - தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி
தருமபுரி: அரூர் பேரூராட்சியில் தானியங்கி கிருமி நாசினி இயந்திரத்தை சார் ஆட்சியர் பிரதாப் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் முதன்முறையாக தானியங்கு கிருமி நாசினி இயந்திரத்தினை சார் ஆட்சியர் பிரதாப் தொடங்கிவைத்தார். வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்களில் இந்த தானியங்கு கிருமி நாசினி இயந்திரத்தைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் அரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிலும் இந்த இயந்திரத்தைச் செயல்படுத்த அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க:வெளிமாநில லாரி ஓட்டுநர்களுக்கு இலவசமாக உணவு!