தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த காவலர் போஸ்கோவில் கைது - சிறுமி பாலியல் வண்புணர்வு

தருமபுரி: திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த காவலர் ஒருவர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

student-sexual-harassment
student-sexual-harassment

By

Published : May 20, 2020, 2:52 PM IST

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் வெதரம்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதியினரின் மகள் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அவர்களின் உறவினரான நல்லம்பள்ளியை அடுத்த சேஷம்பட்டியைச் சேர்ந்த வெற்றிவேல்(27) என்பவர் பொள்ளாச்சியில் காவலராக பணிபுரிந்து வந்தார்.

அதையடுத்து, மாணவியை திருமணம் செய்துகொள்வதாகக் கூலித் தொழிலாளி தம்பதியினரிடம் ஆசை வார்த்தைக் கூறிய வெற்றிவேல், அவர்கள் மூவரையும் பொள்ளாச்சியில் உள்ள காவலர் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளார். அதைத்தொடர்ந்து, அவர் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதன்பின், அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில், வெற்றிவேல் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:சிறுமியைக் காதலித்து அத்துமீறிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

ABOUT THE AUTHOR

...view details