தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஈச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த மதலைமுத்து என்பவரது மகள் சோபியா கிளாரா(20). இவர் அரசு கலை கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இன்று கல்லூரிக்கு வந்த அவர், அதன் பின்பகுதியில் உள்ள ரயில் பாதையில் பிற்பகல் ஒரு மணிக்கு கோயம்புத்தூர் - மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் .
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி ரயில்வே காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனா். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு கலைக் கல்லூரி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை இதையும் படிங்க:திருமணமான 8 மாதங்களில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை.!