தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜகவை கண்டித்து நவம்பர் 26ஆம் தேதி வேலை நிறுத்தம்: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு - Dharmapuri district news

தருமபுரி: பாஜகவின் தேச விரோத செயலை கண்டித்து வருகிற நவம்பர் 26ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வகை தொழிலாளர்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணை செயலாளர் கே.சுப்பராயன் எம்.பி., தெரிவித்துள்ளார்.

நவம்பர் 26ஆம் தேதி வேலை நிறுத்தம்
நவம்பர் 26ஆம் தேதி வேலை நிறுத்தம்

By

Published : Oct 16, 2020, 5:08 PM IST

தருமபுரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் இன்று (அக்.16) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அதன் மாநில துணைச் செயலாளரும் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுப்பராயன் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "இந்தியாவில் தேச விரோத, மக்கள் விரோத, அரசியல் அமைப்புச் சட்ட விரோத செயல்களில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 26ஆம் தேதி வேலை நிறுத்தம்

வேளாண் சட்ட மசோதா உள்ளிட்ட மூன்று சட்டங்களும் தொழிலாளியை அவர்களது சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றும் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.

மக்களை ஏமாற்றி திரிகிற மத்திய அரசை கண்டித்து இந்தியா முழுவதும் வருகிற நவம்பர் 26 ஆம் தேதியன்று அனைத்து வகை தொழிலாளர்கள் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்ச வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுக்கு எதிராக இ.கம்யூனிஸ்ட் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details