அரூர் தொகுதிக்குட்பட்ட கம்பைநல்லூர் பகுதியில் இன்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சம்பத்குமாரை ஆதரித்து, கம்பைநல்லூர் பேருந்து நிலையத்தில் பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி. ஸ்டாலின் அரசியல் வியாபாரி. அதனால்தான் தன் கட்சியினரையே நம்பாமல், பீகாரில் இருந்து வந்த பிரசாந்த் கிஷோரை நம்புகிறார். பிரசாந்த் கிஷோர்தான் திமுகவில் ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர்களையே நியமனம் செய்கிறார்.
’அரசியல் வியாபாரி ஸ்டாலின்’ - சொல்கிறார் அன்புமணி! - பாமக
தருமபுரி: முதலமைச்சர் பழனிசாமி ஒரு விவசாயி என்றும் மு.க.ஸ்டாலின் அரசியல் வியாபாரி எனவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
anbumani
மேலும், தற்போது நடக்கின்ற ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி. சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ள ஆட்சி. ஆனால் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை, இலவச கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட நலத்திட்டங்களை பொதுமக்கள் எண்ணிப்பார்த்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பாஜகவை அனுமதிக்கக் கூடாது - திருமாவளவன்
Last Updated : Mar 26, 2021, 7:20 PM IST