தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் பூ மிதித்திருவிழா: நேர்த்திக்கடன் செலுத்தி மகிழ்ந்த பக்தர்கள்! - தர்மபுரி மாவட்டச்செய்திகள்

தர்மபுரி: ஏழு ஊர் இணைந்து நடத்திய ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் பூ மிதித் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் பூ மிதி திருவிழா
ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் பூ மிதி திருவிழா

By

Published : Apr 8, 2021, 10:56 PM IST

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ராமகொண்டஅள்ளியில் உள்ள, பிரசித்திப்பெற்ற ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தில் கடந்த மூன்று நாள்களாகத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் மூன்றாம் நாள் நிகழ்ச்சியான இன்று (ஏப். 8) பூ மிதித் திருவிழா நடைபெற்றது.

தர்மபுரி ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் பூ மிதித் திருவிழா

இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் தீ மிதித்து, தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.

அதுமட்டுமன்றி, கடந்த மூன்று நாள்களாக இங்கு சிறப்பான அன்னதானம் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'திருச்செந்தூர் கோயிலில் ரூ.19.80 கோடி மதிப்பில் தடுப்புச் சுவர் - இந்து சமய அறநிலையத் துறை விளக்கம்!'

ABOUT THE AUTHOR

...view details