கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகளை அரசு மூடியுள்ளது. இதனால் மது பிரியர்கள் மதுபானம் கிடைக்காத காரணத்தால் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்ச தொடங்கிவிட்டனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சிலர் தங்கள் விவசாய நிலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தருமபுரி மதுவிலக்கு பிரிவுக்கு தகவல் வந்தது. இந்தத் தகவலையடுத்து மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான காவல் துறையினர், பாலக்கோடு அடுத்த அனுமந்தபுரம் பகுதியில் ரோந்து சென்றனர்.