தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறப்பு ரயில்கள் இயக்கம்: முன்பதிவு செய்தோருக்கு மட்டுமே அனுமதி!

தருமபுரி மொரப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கோவைக்கு சென்ற சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

சிறப்பு ரயில்கள் இயக்கம்
சிறப்பு ரயில்கள் இயக்கம்

By

Published : Sep 7, 2020, 2:50 PM IST

தமிழ்நாடு முழுவதும் தற்போது பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் (செப்.07) தமிழ்நாடு முழுவதும் 13 சிறப்பு ரயில்களை இயக்க அரசு அனுமதி அனுமதித்தது. மேலும் இந்த சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கம் தொடங்கிய நிலையில், சென்னையில் இருந்து சேலம் மார்க்கமாக கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில் நிலையத்தில் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு சில பயணிகள் சாதாரண கட்டணத்தில், முன்பதிவு செய்யாமல் பயணம் செய்ய வந்திருந்தவர்களை ரயில்வே ஊழியர்கள் திருப்பி அனுப்பினர். பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி எனக்கூறி முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தினர்.

அரசு அறிவுறுத்தியபடி பயணம் செய்ய வந்த பயணிகள் முகக்கவசம், தகுந்த இடைவெளியை கடைபிடித்து ரயில் பயணம் மேற்கொண்டனா்.

இதையும் படிங்க:5 மாதங்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details