தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மவுனஅஞ்சலி ஊர்வலம் - SL attack

தருமபுரி:  இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சமூக சேவை சங்கம் சார்பில் நடந்த மவுனஅஞ்சலி ஊர்வலத்தில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.

சர்வமதத்தினர் மவுனஅஞ்சலி ஊர்வலம்

By

Published : May 4, 2019, 11:05 PM IST

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டு வெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை தருமபுரி சமூக சேவை சங்கம் மற்றும் சமூக நல்லிணக்க மேடை இணைந்து ஏற்பாடு செய்தது.

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சர்வமதத்தினர் மவுனஅஞ்சலி ஊர்வலம்

இதில் சாதி, மதம் பார்க்காமல் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும், இதனைத்தொடர்ந்து மவுன அஞ்சலி ஊர்வலமும் நடைபெற்றது. மேலும், அனைத்து மத போதகர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details