தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் - signature movement against CAA in dharmapuri

தருமபுரி: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்களை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

signature movement against CAA in dharmapuri
signature movement against CAA in dharmapuri

By

Published : Feb 4, 2020, 9:10 AM IST

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தருமபுரி அரசுக் கலைக்கல்லூரி முன்பு சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி சட்டபேரவைத் தொகுதி செயலாளர் சக்தி தலைமையில் இந்தக் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கையெழுத்து இயக்கம்

இந்த நிகழ்ச்சியை திமுக மாவட்ட செயலாளரும் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி தொடங்கிவைத்தார். இந்தக் கையொப்பமிடும் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் எனப் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு கையொப்பமிட்டனர்.

இதையும் படிங்க: தேசியத் தலைவர்களுடன் இருக்கும் புகைப்படத்தைக் காட்டி பெண் நூதன முறையில் மோசடி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details