தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூரில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை அத்தியாவசிய வசதிகள் எதுவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்படவில்லை.
இதுகுறித்து அரசியல் கட்சியினர், மாவட்ட அலுவலர்கள் ஆகியோரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனைக் கண்டித்து இன்று (அக்.5) ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத்திறனாளி ஒருவருடன் சேர்ந்து பொதுமக்கள் 70க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் ஏரியூர் பேருந்து நிலையத்தில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.