தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இபிஸ் வாகனம் மீது காலணி வீச்சு: அதிமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர் காலணியை வீசினார். இது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இன்று கட்சித் தொண்டர்கள் இணைந்து தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

AIADMK cadres protest in dharmapuri
AIADMK cadres protest in dharmapuri

By

Published : Dec 6, 2021, 3:10 PM IST

தருமபுரி: தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று ஜெயலலிதா நினைவிடத்தில் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பும் வழியில் அவரது காரின் மீது காலணி வீசப்பட்டது.

இந்தச் சம்பவம் நடைபெற்றதைக் கண்டித்து தருமபுரி அதிமுக சார்பில் இன்று தருமபுரி நான்கு சாலைப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இதில், தமிழ்நாடு அரசு முழுமையான பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுக்கு நினைவஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கியது தவறு என்றும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்குத் தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் முறையீடு

ABOUT THE AUTHOR

...view details