தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காரிமங்கலம் வாரச் சந்தையில் ஆடுகள் விலை சரிவு! - tamilnadu latest news

தருமபுரி: காரிமங்கலம் வாரச் சந்தையில் கடந்தாண்டு பொங்கல் பண்டிகையைவிட நிகழாண்டில் ஆடுகளின் விலை குறைந்து விற்பனை ஆகிவருகின்றன.

ஆட்டின் விலை குறைந்து விற்பனை
ஆட்டின் விலை குறைந்து விற்பனை

By

Published : Jan 6, 2021, 6:49 AM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வாரச் சந்தைக்கு விவசாயிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

ஆடுகளை வாங்க குறைந்தளவு வியாபாரிகள் வந்தனர். சந்தையில் ஒரு ஆடு 8,000 ரூபாய் முதல் 16,000 ரூபாய் வரை விற்பனையானது.

ஆட்டின் விலை குறைந்து விற்பனை

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது, இந்த விலையிலிருந்து 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது.

காரிமங்கலம் வாரச் சந்தையில் நேற்று(ஜன.5) மொத்தம் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஆடுகள் திருட்டு: போலீஸ் வலைவீச்சு

ABOUT THE AUTHOR

...view details