தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: கட்டட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது! - தருமபுரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

தருமபுரி: பாலக்கோடு அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை

By

Published : Nov 13, 2019, 1:05 PM IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியைச் சேர்ந்த பழங்குடி பள்ளி மாணவி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்து ஒரு கி.மீ தூரம் உள்ள தனது வீட்டிற்க்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக மதுபோதையில் வந்த பாலக்கோட்டை அடுத்து வெள்ளி சந்தையைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் அப்பு (எ) முனியப்பன் (26) தனது இரு சக்கர வாகனத்தில் மாணவியை ’வீட்டில் விட்டு விடுகிறேன் வா’ என அழைத்துள்ளார்.

சாலை மறியலில் ஈடுபடும் பொதுமக்கள்

மாணவி மறுக்கவே வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ஒதுக்குபுறமாக உள்ள சோழக்காட்டு பகுதிக்கு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய தூக்கிச் சென்றுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற இளைஞர்கள், மாணவியை மீட்டு பாலியல் வன்கொடுமை முயற்சி செய்த நபரை பிடித்தனர்.

பின்னர், அவரையும் அவருடைய இரு சக்கர வாகனத்தையும் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பலத்த காயங்களுடன் மீட்ட மாணவிக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவலறிந்த நூற்றிற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாரண்டஅள்ளி காவல் நிலையம் முன்பு குவிந்தனர். மாணவிக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் அந்த இளைஞரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மாரண்டஅள்ளி - பாலக்கோடு நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க : ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியர் கைது!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details