தர்மபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பெரியூர் பகுதியைச் சே்ரந்த ஜெய்கிருஷ்ணன் (65), பென்னாகரம் அடுத்த காட்டுப்பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாடு மேய்த்துள்ளார். அப்போது, அப்பகுதியில் வசித்துவரும் 13வயது சிறுமியிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
முதியவரின் பாலியல் அத்துமீறலால் அண்மையில் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த 21ஆம் தேதி சிறுமிக்கு ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது. பின்பு, சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில், சிறுமி தனக்கு நேர்ந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.