தருமபுரி:தருமபுரி-திருவண்ணாமலை நான்கு வழிச்சாலைப் பணிகள், முதலமைச்சரின் சாலை விரிவாக்கத்திட்டத்தின்கீழ் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அரூர் அழகிரி நகர் முதல் அரூர் வரையிலான சாலையில், இருவழித்தடத்தில் இருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்துதல் மற்றும் மேம்பாடு செய்தல், புதிய சாலை அமைத்தல், என அகலப்படுத்தும் பணியானது ரூ.4182 லட்ச மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியை நாமக்கல் பகுதியைச் சேர்ந்த கே.ஆர்.எம்.எஸ் & ஆர்.எஸ். கன்ஸ்ட்ரக்சன்ஸ், ஒப்பந்தம் எடுத்து செய்துவருகின்றனர். இதில் இருவழிப்பாதையில் இருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணியில் தரைப்பாலம் அமைத்தல், தடுப்பு அமைத்தல், மண் கொட்டி சீர் செய்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.