கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக தளர்வுகளற்ற முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால், அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், அரூர் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக அரூர் டிஎஸ்பி வி.தமிழ்மணிக்குத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, அரூர் உட்கோட்ட காவல் துறையினர் பொம்மிடி, கோம்பூர், ஊத்துக்குளி, கலசப்பாடி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சோதனை நடத்தினர். அப்போது, கலசப்பாடி மலைக்கிராமத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
ஊரடங்கை மீறி கள்ளச்சாராயம் விற்பனை: ஏழு பேர் கைது!
தர்மபுரி: கரோனா பொதுமுடக்கத்தைப் பயன்படுத்தி அரூர் அருகே உள்ள மலைக்கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய ஏழு பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஊறல்களை காவல் துறையினர் தீயிட்டுக் கொளுத்தி அழித்தனர். மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த கலசப்பாடி மலைக்கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை, பரமசிவம், விஜயகுமார், கிருஷ்ணன், அஜித் குமார், வேடன், முருகன் ஆகிய ஏழு பேரைக் கைது செய்தனர். தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப் பயன்படுத்தி வந்த பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், அரூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் காரிமங்கலம் அருகே நடத்திய வாகன சோதனையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த மணிவேல், பிரபாகரன் ஆகிய இருவரையும் அரூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 48 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆம் அலகில் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்!