திமுகவை சேர்ந்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரான செந்தில்குமார், தான் பங்கு கொள்ளும் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில், ’I BELONG TO THE DRAVIDIAN STOCK’ என பெயர் பொறித்த முகக்கவசம் அணிந்து வருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். ’நான் திராவிட பாரம்பரியத்தைச் சார்ந்தவன்’ எனப் பொருள்படும் இந்த முகக்கவசத்துடனேயே, இன்று நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்திலும் அவர் பங்கேற்றார்.
இது குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய அவர், “ இந்த முகக்கவசத்தை முதன் முதலில் வடிவமைத்து அணிந்தவர் உதயநிதி ஸ்டாலின். அவரை நான் சந்தித்தபோது எனக்கு அவர் வழங்கியதுதான் இந்த முகக்கவசம். இதில் இருக்கக்கூடிய சொற்றொடரை கூறியவர் பேரறிஞர் அண்ணா. முதல் முதலாக நாடாளுமன்றத்தில் அவர் பேசும்போது, முதல் வாக்கியமாக அவர் இதைத்தான் பேசினார்.