தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர். செந்தில்குமார் இன்று இண்டூர் பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அன்புமணி ராமதாஸ் தொகுதி மக்களுக்கு எந்தவித நலத்திட்ட உதவிகளும் செய்யவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,வன்னியர் சங்கத் தலைவருமான, குரு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
மரணத்தருவாயில் குருவுக்கு உதவாத அன்புமணி - pmk
தர்மபுரி: மரணத் தருவாயில் பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குருவுக்கு உதவாத அன்புமணி ராமதாஸ் உங்களுக்கு என்ன செய்யப்போகிறார் என தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் தேர்தல் பரப்புரையில் மக்களிடம் கேள்வி எழுப்பினார்.
அவரை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்என அவரது குடும்பத்தார்கள் பாமக கட்சி தலைமையிடம் வேண்டுகோள் வைத்தனர். ஆனால் பாமகவினர் அவருக்கு விசா இல்லாத காரணத்தால், வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல இயலவில்லை என தெரிவித்தனர். ஆனால் குருவின் குடும்பத்தினர் அவர் பலமுறை மலேசியாவிற்கு சென்று வந்துள்ளார் என்று மறுப்பு தெரிவித்தனர்.
இவ்வாறு பாமகவிற்கு உழைத்த குரு குடும்பத்திற்கே எதுவும் செய்யாத அன்புமணி ராமதாஸ், உங்களுக்கு என்ன செய்யப்போகிறார்" எனக் கூடியிருந்த மக்களிடம் கேள்வி எழுப்பினார்.