தர்மபுரி : பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். அவரது மனைவி சுமதி. இவர்கள் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது ஒகேனக்கல் ஐவர் பவனி அருகே செல்ஃபி எடுக்க முற்பட்டபோது சுமதி ஆற்றில் விழுந்துள்ளார். விழுந்ததில் பாறையில் பலத்த அடிபட்டு தண்ணீரில் தத்தளித்து உள்ளார். அவரை அங்கிருந்த பரிசல் ஓட்டிகள் துணையுடன் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி சுமதி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்ஃபி எடுக்கும்போது தவறிவிழுந்தாரா? அல்லது தற்கொலை முயற்சி செய்தாரா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.