தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், அரூர்(தனி) ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்குள்ள1,817 வாக்குச்சாவடிகளில், வாக்கு பதிவு நிறைவடைந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. தொடர்ந்து, அங்கிருந்து செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.பி., கார்த்திகா, மற்றும் தேர்தல் பொது பார்வையாளர்கள் நேரடிப் பார்வையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டதை அடுத்து, ஆயுதமேந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு பதிவு மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.