தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த எட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள மாட்டிறைச்சிக் கடையில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் மக்களை கூட்டமாகக் கூட்டிவைத்து இறைச்சி விற்பனை செய்துவருவதாக அடிக்கடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வந்தன.
சமூக இடைவெளியைப் பின்பற்றாத மாட்டிறைச்சிக் கடைக்குச் சீல்வைப்பு - அரூரில் இறைச்சிக் கடைக்குச் சீல்
தருமபுரி: அரூர் அருகே சமூக இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரம் செய்ததாக மாட்டிறைச்சிக் கடைக்கு சார் ஆட்சியர் பிரதாப் சீல்வைத்து நடவடிக்கை எடுத்தார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவுப்படி, எட்டிபட்டியில் உள்ள மாட்டிறைச்சிக் கடையை சார் ஆட்சியர் பிரதாப் ஆய்வுசெய்தார். ஆய்வில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக அரசு கடைப்பிடிக்க வலியுறுத்திய சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், இறைச்சிக் கடையை சுகாதாரமற்ற முறையில் நடத்திவந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் கடை நடத்தியதாகவும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், கரோனா வைரஸ் தொற்று பரவும் வகையில் அலட்சியமாகக் கடத்தியதாக மாட்டிறைச்சிக் கடை உரிமையாளரை எச்சரித்து, சார் ஆட்சியர் பிரதாப் கடைக்குச் சீல்வைத்தார்.