தர்மபுரி: அதகபாடி அடுத்த ராமன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (43). இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகளும், மூன்று வயதில் மகனும் உள்ளனர். முத்துராஜ், மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். இவர், இன்று (செப்.22) காலை பள்ளிக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றார்.
இண்டூர் பேருந்து நிலையம் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது, டிப்பர் லாரியின் கடைசி சக்கரம் மோதியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, லாரி முத்துராஜின் தலையின் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.