தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் சாதியப் பாகுபாடு - தனிப்பள்ளி கேட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - School students protest

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் சாதி பற்றி பேசியதால், தங்களுக்கு தனி அரசுப் பள்ளி வேண்டும் எனத் தெரிவித்து அரசுப் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் சாதிய பாகுபாடு
பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் சாதிய பாகுபாடு

By

Published : Apr 25, 2022, 9:14 PM IST

தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட வடகரை பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 110 மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 23ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு தேர்வு நடைபெற்றது.

அப்போது ’இப்பள்ளியில் பள்ளி உறுப்பினர் பதவிக்கு பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட வேண்டாம் உங்களை நாடி நாங்கள் வரத் தேவையில்லை’ என அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்கசாதியினர் பேசியதாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் பாதிப்படைந்த பட்டியலின சாதியினர், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி வளாகம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் சாதியப் பாகுபாடு

இதுபோன்ற நிகழ்வு மேலும் நடைபெறாமல் இருக்க வடகரை பகுதிக்கு தனி அரசு பள்ளிக்கூடம் அமைத்துத் தர வேண்டும் எனவும்; தமிழ்நாடு அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் மஞ்சுளா மற்றும் தென்கரை கோட்டை ஊராட்சிமன்றத்தலைவர் விஜயா சங்கர், வட்டார கல்வி அலுவலர் ரேணுகாதேவி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

இதையும் படிங்க:கோயில்களை காப்போம்! கோவையை காப்போம் - இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details