தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவி உள்பட எட்டு பேருக்கு கரோனா! - தருமபுரி கரோனா நிலவரம்

தருமபுரி: பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி உள்பட எட்டு பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

5COVID-19 status in dharmapuri
தருமபுரி கரோனா நிலவரம்

By

Published : Jul 3, 2020, 8:23 AM IST

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகேயுள்ள தொப்பலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொறியாளர், பெங்களூரு சென்று திரும்பியவர் மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து தருமபுரி நகர பகுதி காமாட்சி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் என மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், பென்னாகரம் பேரூராட்சி இரண்டாவது வார்டு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வயது 45 பெண் மற்றும் 22 வயதான பொறியியல் மாணவன் ஆகியோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், தருமபுரி காமாட்சியம்மன் தெருவை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி மற்றும் வெளிநாடுகளில் இருந்து தருமபுரி திரும்பிய இரண்டு நபர்கள் என எட்டு பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து தொற்று ஏற்பட்டுள்ள அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 93 நபர்களுக்கு வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வீடு தேடி வரும் கரோனா நிவாரணம்!

ABOUT THE AUTHOR

...view details