தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருவர், மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்து வந்துள்ளனர்.அதுமட்டுமல்லாமல், தொலைபேசியில் சித்திரங்கள், குறுந்தகவல்கள், காதல் கவிதைகள் அனுப்பியதாக மாணவிகளின் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தனர்.
ஆனால், இதற்கு பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் ஆசிரியர்கள் லட்சுமணன், சின்ன முத்துவை பிடித்து காவல்துறையினரிடம்பொதுமக்கள் ஒப்படைத்தனர்.