தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் கலந்து கொண்டார்.
குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு! - Schedule caste reforms review meeting
தருமபுரி: குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் வலியுறுத்தியுள்ளார்.
![குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3891793-thumbnail-3x2-dpi.jpg)
குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கல்விக்கடன், தொழில்கடன் உள்ளிட்டவற்றில் கடன் வழங்கிட வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு!
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவிகளுக்கு குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்கள் தொடர்ந்து கல்வி பயிலவும், மறுவாழ்வு அளிக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்றும், குழந்தை திருமணம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.