தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிறந்தநாள் கொண்டாட சேமித்த பணத்தை கரோனா நிதிக்கு வழங்கிய சிறுமி - தமிழ்நாட்டில் கரோனா

தருமபுரி: பிறந்தநாள் கொண்டாட சேமித்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சிறுமி ஒருவர் வழங்கியுள்ளார்.

பிறந்த நாள் கொண்டாட சேமித்தப் பணம்; கரோனா நிதிக்கு வழங்கிய சிறுமி
பிறந்த நாள் கொண்டாட சேமித்தப் பணம்; கரோனா நிதிக்கு வழங்கிய சிறுமி

By

Published : Apr 21, 2020, 10:35 AM IST

கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பல்வேறு அமைப்பினர், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் நிவாரண உதவிகளை வழங்கிவருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த ஜம்மனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர் மாரியப்பன் மகள் காவியா என்னும் சிறுமி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாட சேமித்துவைத்த ஆயிரத்து 600 ரூபாயை கரோனா நிதிக்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழியிடம் ஒப்படைத்தார்.

பிறந்தநாள் கொண்டாட சேமித்த பணத்தை கரோனா நிதிக்கு வழங்கிய சிறுமி

தனது பிறந்தநாளைக்கூட கொண்டாடாமல் அதன் செலவுத் தொகையை நிவாரண நிதிக்காக வழங்கிய சிறுமியை ஆட்சியர் பாராட்டி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து அனுப்பிவைத்தார்.

இதையும் படிங்க:கரோனாவைக் கையாள மாநில அரசுகளுக்கு ரூ.46,038 கோடி - மத்திய நிதி அமைச்சகம்

ABOUT THE AUTHOR

...view details