தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவமனையில் சசிகலா உடல் நலத்துடன் உள்ளார்- பௌரிங் மருத்துவமனை டீன் பேட்டி - சசிகலாவுக்கு உடல் நலக்குறைவு

கர்நாடகா பௌரிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா மருத்துவமனையில் உடல் நலத்துடன் உள்ளார் என மருத்துவமனை டீன் மனோஜ் தெரிவித்துள்ளார்.

பவுரிங் மருத்துவமனை டீன் பேட்டி
பவுரிங் மருத்துவமனை டீன் பேட்டி

By

Published : Jan 21, 2021, 5:10 PM IST

பெங்களூரு (கர்நாடகா): பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா நேற்று(ஜன.20) திடீர் உடல்நலக் குறைவு காரணமாக பௌரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் சசிகலாவிற்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவமனை டீன் மனோஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”சசிகலா மூச்சுத்திணறல், காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்னைகளின் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது.

பவுரிங் மருத்துவமனை டீன் பேட்டி

தொடர்ந்து கண்காணிக்கவே அவர் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாரே தவிர, அவர் ஐசியுவில் அனுமதிக்க வேண்டிய நோயாளி அல்ல. அவர் காலை உணவு எடுத்துக்கொண்டார். இரண்டு அல்லது மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிக்கப்படுவார் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’சசிகலாவின் உடல்நிலை பாதிப்பு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’: மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

ABOUT THE AUTHOR

...view details