தர்மபுரி:பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இன்று (ஜூலை 25) தனது 83ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
ராமதாஸ் பிறந்தநாள் - விவசாயிகளுக்கு மரக்கன்று - Sapling for farmers
பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியினர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.
![ராமதாஸ் பிறந்தநாள் - விவசாயிகளுக்கு மரக்கன்று விவசாயிகளுக்கு மரக்கன்றுகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:23:44:1627210424-tn-dpi-01-pmk-ramadoss-birthday-vis-tn10041-25072021143952-2507f-1627204192-857.jpg)
விவசாயிகளுக்கு மரக்கன்றுகள்
அதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டம்மொரப்பூர் அருகே உள்ள கொல்லாபுரி பாமக நிர்வாகிகள், ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள், வேட்டி, சேலையும் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளையும் வழங்கி கொண்டாடினர்.
இதையும் படிங்க:ராமதாஸ் பிறந்தநாள் - வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்களுக்கு நன்றி