தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. கடந்த வாரம் தருமபுரி மாவட்ட கரோனா வைரஸ் கண்காணிப்பு அலுவலர் சந்தோஷ் பாபு, பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிவதைக் கண்டறிந்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கினார்.
மாஸ்க் அணியச் சொன்ன பேரூராட்சிப் பணியாளர்: கன்னத்தில் அறைந்து ரகளையில் இறங்கிய நபர் - முக கவசம்
தர்மபுரி: காரிமங்கலத்தில் முகக்கவசம் அணியச் சொன்ன பேரூராட்சிப் பணியாளரை நபர் ஒருவர் கன்னத்தில் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணியாளரின் கன்னத்தில் அறையும் வாகன ஓட்டி
இதனையடுத்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி மாவட்டத்திலுள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் முககவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த வகையில், காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகம் எதிரே மொரப்பூர் சாலையில் பேரூராட்சியில் சுகாதாரப் பணியாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள் அப்பகுதியைக் கடந்துசெல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர்.