தர்மபுரி: மாட்லாம்பட்டி பகுதியில் தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்துகள், ரத்தக்கறை படிந்த பஞ்சுகள், கரோனா கவச உடைகள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் இரவு நேரங்களில் அங்கிருக்கும் ஏரியில் கொட்டப்படுகின்றன.
இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் ஏரியின் அருகே மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் மருத்துவக்கழிவுகளை உட்கொண்டு இறந்து வருகின்றன.