தர்மபுரி மாவட்ட பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநிலத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக மூத்த தலைவர் ஜிகே மணி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பொது இடங்களில் சாக்லேட் வடிவில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டுவருகிறது. கஞ்சா விற்பனையில் அதிக வருமானம் ஈட்டுபவர்கள் கஞ்சாவை, சாக்லேட்டுகளாக தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என பல்வேறு பகுதிகளில் விற்பனை நடைபெறுகிறது. தமிழ்நாடு காவல்துறை நினைத்தால் இதனை தடுத்து நிறுத்த முடியும். ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுத்து போதைப்பொருள்கள் விற்பனையை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தர்மபுரி பாமக சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாரிமோகன், வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:பள்ளிகளில் 'மை போஸ்ட்; மை ரைட்' புகார் பெட்டி - செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்!