தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தர்மபுரி அருகே 9.70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் - தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

தர்மபுரி அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ஒன்பது லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

தருமபுரி அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட  ரூ. 9 லட்சத்து பணம் 70 ஆயிரம் பணம், தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
தருமபுரி அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ. 9 லட்சத்து பணம் 70 ஆயிரம் பணம், தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

By

Published : Mar 17, 2021, 8:16 AM IST

Updated : Mar 17, 2021, 8:43 AM IST

தர்மபுரி: சோகத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (மார்ச்.16) வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலக்கோட்டிலிருந்து தர்மபுரி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

இச்சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி ஒன்பது லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து வந்தது தெரிய வந்தது. பணத்தை எடுத்து வந்த நபரின் பெயர் வினோத் என்பதும், அவர் தனியார் பால் கொள்முதல் நிறுவன ஊழியர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, தர்மபுரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மு.பிரதாப்பிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க :'ஸ்டவ் அடுப்புக்கு டீசல்; சிலிண்டரின் விலை ரூ. 4500' - உளறியக்கொட்டிய திண்டுக்கல் சீனிவாசன்

Last Updated : Mar 17, 2021, 8:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details