தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை பாதுகாப்பு வார விழா: இருசக்கர வாகனம் ஓட்டி பேரணியில் கலந்துகொண்ட தர்மபுரி ஆட்சியர்! - பேரணியில் இருசக்கர வாகனம் ஓட்டிய ஆட்சியர்

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நடந்த வாகன பேரணியில், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா இருசக்கர வாகனம் ஓட்டி பேரணியில் கலந்துகொண்டார்

இருசக்கர வாகனம் ஓட்டி  பேரணியில் கலந்து கொண்ட தர்மபுரி ஆட்சியர்
இருசக்கர வாகனம் ஓட்டி பேரணியில் கலந்து கொண்ட தர்மபுரி ஆட்சியர்

By

Published : Jan 21, 2021, 6:46 PM IST

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், 32ஆவது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நடந்த விழாவில், நான்காம் நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தலைக்கவசம் அணிவது குறித்த மகளிர் மட்டும் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ் குமார் தொடங்கி வைத்தார். பேரணியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தலைக்கவசம் அணித்து இருசக்கர வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் தர்மபுரி நான்கு ரோடு சந்திப்பு வரையுள்ள 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் செய்தார்.

மாவட்ட ஆட்சியருடன் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பேரணியில் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் மு.பிரதாப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.

இதையும் படிங்க:மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம்: சென்னை செங்கொடி சங்கம் எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details