தமிழ்நாடு

tamil nadu

தர்மபுரி அருகே பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

By

Published : Feb 7, 2022, 6:33 AM IST

தர்மபுரி அருகே பிக்கப் வாகனம் பள்ளத்தில் சிக்கிக் கவிழ்ந்ததில் அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம் : இருவர் பலி
பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம் : இருவர் பலி

தர்மபுரி: பாலக்கோடு அடுத்த ஜக்கசமுத்திரம் ஓட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 12 நபர்கள் துக்க நிகழ்ச்சிக்காக பிக்கப் வாகனத்தில் பெட்டமுகிலாலம் பகுதிக்குச் சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பினர்.

பெட்டமுகிலாலம் செல்லும் மலைப்பாதையில் வாகனம் வந்து கொண்டிருந்தபோது திடீரென பள்ளத்தில் பிக்கப் வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பிக்கப் வாகனத்தின் பின்னால் நின்றிருந்த தீபா (35), தங்கம்மாள் (55) என்கிற இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .

விபத்தில் பலத்த காயமடைந்த பத்து நபர்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிக்அப் வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநரை மாரண்டஅள்ளி காவல்துறையினர் பிடித்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய நபர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'திமுக விஞ்ஞானப்பூர்வ ஊழலில் கெட்டிக்காரர்கள்' - ஜெயக்குமார் கிண்டல்

ABOUT THE AUTHOR

...view details