தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தர்மபுரியில் திமுகவினரின் விளம்பர மோகத்தால் நோய்த் தொற்று அபாயம்! - தர்மபுரி அண்மைச் செய்திகள்

தர்மபுரி: எந்தவித தகுந்த இடைவெளியையும் கடைபிடிக்காமல் பொது மக்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்குவது போல புகைப்படம் எடுத்துக் கொண்ட திமுகவினரின் விளம்பர மோக செயலால் கரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தகுந்த இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட திமுகவினரின் செயல் தொடர்பான காணொளி.
தகுந்த இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட திமுகவினரின் செயல் தொடர்பான காணொளி.

By

Published : May 21, 2021, 7:04 AM IST

Updated : May 21, 2021, 7:33 AM IST

தர்மபுரி மாவட்டம், புளுதிகரை ஊராட்சிக்கு உட்பட்ட சவுளூர் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் கரோனா நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் வழங்குவதற்காக குடும்ப அட்டைகளுக்கு கடந்த வாரம் டோக்கன் வழங்கப்பட்டன.

நிவாரணத் தொகையைப் பெற, நேற்று முன்தினம் (மே.19) காலை பயனாளிகள் நியாய விலைக்கடை முன்பு தகுந்த இடைவெளியுடன் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த உள்ளூர் திமுக நிர்வாகிகள், தகுந்த இடைவெளி ஏதும் கடை பிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் பயனாளிகளைக் கூட்டமாக திரட்டினர்.

தகுந்த இடைவெளியைக் காற்றில் பறக்கவிட்ட திமுகவினரின் செயல்!

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் உள்ள பேனா் முன்பு நின்று நிவாரணத்தொகை வழங்குவது போல படம் எடுத்துக் கொண்டனா். தர்மபுரி திமுக எம்.பி.செந்தில்குமார், தர்மபுரி மாவட்டத்தை 'ரெட் அலார்ட்' மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால், விளம்பர மோகத்தால் தகுந்த இடைவெளியைக் காற்றில் பறக்கவிட்ட திமுகவினரின் செயல் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : மூதாட்டியின் உயிர் காக்கப் போராடிய இளம்பெண்ணை பாராட்டிய ஸ்டாலின்

Last Updated : May 21, 2021, 7:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details