தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆக்கிரமித்து கட்டப்பட்ட நிறுவனங்களுக்கு வருவாய்த் துறை சீல்! - Revenue dept Seal for Occupied Companies in dharumapuri

தருமபுரி: அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ரோட்டரி சங்க திருமண மண்டபம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

Revenue dept Seal
Revenue dept Seal

By

Published : Dec 25, 2019, 2:36 PM IST

தருமபுரி நான்கு ரோடு அருகே வட்டார வளர்ச்சி காலனி, அரசு தொடக்கப்பள்ளி மற்றும் காலியிடங்கள் இருந்தன. வட்டார வளர்ச்சி காலனியில் வசித்துவந்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன் வீடுகளைக் காலி செய்தனர். இந்த காலனி அருகே இருந்த அரசு தொடக்கப்பள்ளி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், 895 சதுர மீட்டர் இடத்தை தருமபுரி ரோட்டரி நிர்வாகிகள் முறைகேடாக பத்திரப் பதிவு செய்தனர்.

Revenue dept Seal

அதைத் தொடர்ந்து பள்ளி செயல்பட்ட கட்டடத்தை இலவச தையல் பயிற்சி மையமாகவும், காலியிடத்தில் திருமண மண்டபம் கட்டப்பட்டது. சில மாதங்களுக்கு முன், வட்டார வளர்ச்சி காலனியில் இருந்த அரசு குடியிருப்புக்கள் இடிக்கப்பட்டு, இடத்தின் மொத்த பரப்பளவு கணக்கெடுக்கப்பட்டது. அதில், 895 சதுர மீட்டர் நிலத்தை ரோட்டரி சங்கத்தின் பேரில் முறைகேடாக பத்திரப் பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இடத்தை காலி செய்யும்படி ரோட்டரி சங்க நிர்வாகிகளுக்கு மூன்று மாதங்களுக்கு முன் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

Revenue dept Seal

ஆனால் இடத்தை காலி செய்யாததால், அங்கு கட்டப்பட்ட தையல் பயிற்சி மையம், திருமண மண்டபத்துக்கு தருமபுரி வட்டாட்சியர் சுகுமார், பி.டி.ஓ., ஆறுமுகம் ஆகியோர் நேற்று (டிச. 24) இரவு சீல் வைத்தனர். பல ஆண்டுகளாக ரோட்டரி சங்கம் ஆக்கிரமித்து வைத்திருந்த இடத்தின் தற்போதைய மதிப்பு 20 கோடி ரூபாய் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details