பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டங்கள் நடத்திவருகின்றனர். இந்த மாத தொடக்கத்தில் சென்னையில் நான்கு நாட்கள் போராட்டம் நடைபெற்றது.
அப்போது பேருந்து, ரயில் மீது கற்களை வீசி பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தினர். எனவே போராட்டத்தை நடத்திய வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டும் என பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.
முதல்நாள் ஆர்ப்பாட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் பாமகவினர் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மனு அளித்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பேகராஹள்ளியில் பாமகவினர் கிராம நிர்வாக அலுவலரிடம் இடஒதுக்கீடு கோரி மனு அளித்தனர்.