தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தை தாண்டிய உறவு: கணவனை கொலை செய்ய முயன்ற ஆசிரியை உள்பட மூவர் கைது! - தருமபுரி மாவட்டச் செய்திகள்

தருமபுரி: காரிமங்கலம் அருகே திருமணத்தை தாண்டிய உறவை கண்டித்த கணவனை கொலை செய்ய முயன்ற அரசுப் பள்ளி ஆசிரியை உள்பட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

dharmapuri
dharmapuri

By

Published : Feb 17, 2020, 12:53 PM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மொட்டலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம். அவரது மனைவி பிரியா(41), காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில், சக ஆசிரியர்கள், காரிமங்கலம் பகுதி இளைஞர்கள் சிலருடன் பிரியாவுக்கு திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த பொன்னுரங்கம், பிரியாவை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.

அதில் ஆத்திரமடைந்த பிரியா, இரண்டு வாரங்களுக்கு முன்பு பெரியாம்பட்டி அருகே பொன்னுரங்கம் சென்ற வாகனத்தின் மீது காரை மோதி கொலை செய்ய முயற்சித்தார். அதிலிருந்து பொன்னுரங்கம் காயங்களுடன் உயிர் தப்பினார். அதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன்பு, சிலருடன் சேர்ந்து மயக்க மருந்து கொடுத்து அவரை வீட்டிலேயே கொலை செய்ய முயன்றார். இதையறிந்த பொன்னுரங்கம் காரிமங்கலம் காவல்துறையில் புகார் அளித்தார்.

அதையடுத்து காரிமங்கலம் காவல்துறையினர், பிரியா, சக்திவேல்(23), அருண்குமார்(24) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அதன்பின் காவல்துறையினர் மூவரிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு அவர்களை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவால் இருவர் கொலை: கணவர் கைது

ABOUT THE AUTHOR

...view details