தர்மபுரி:பென்னாகரம் அடுத்த நாச்சானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்மணி. இவரது மனைவி மாலினி. இவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதியன்று இரவு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், ஜூன் 20ஆம் தேதியன்று காலை 8.30 மணியளவில் குழந்தை மாயமானது. இது குறித்து அந்தத் தம்பதி தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வுசெய்து குழந்தையைக் கடத்திச் சென்று நபர்களைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.