தருமபுரி மாவட்டம் அரூர் நான்கு ரோடு பகுதியில் செல்லும் ஒகேனக்கல் குடிநீா் குழாயில் லேசான உடைப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீா் வெளியேறி வந்தது . தண்ணீா் வெளியேறிதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாய் சீரமைப்பு - ஈடிவி பாரத் செய்தி எதிரொலி
தருமபுரி: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி காரணமாக அரூர் நான்கு ரோட்டில் இரண்டு மாதமாக உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டது.
water problem
குழாய் உடைப்பு குறித்து பொதுமக்கள் அரூர் எம்எல்ஏ சம்பத்குமாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், குடிநீர் குழாய் சீரமைக்காமல் கிடப்பது குறித்து கடந்த 2ஆம் தேதி ஈடிவி பாரத் தளத்தில் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியை பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்கள் பார்வையிட்டு சரிசெய்தனர்.
இதையும் படிங்க:மலை ரயில் பாதையில் விலங்குகளை கண்காணிக்கும் கேமரா!